திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ். இவர் நேற்று இரவு மனைவி ராகினியுடன் குண்டூர் பகுதியில் உள்ள வராஹி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது பைக்கை தொடர்ந்து 3 பைக்குகள் வேகமாக வந்தது. அதில் 5 பேர் இருந்தனர். அம்பேத்கர்நகர் சுடுகாடு அருகே சுரேசின் பைக்கை மடக்கி 5 பேரும், அவரை சரமாரியாக வெட்டித்தள்ளினர். அதில் சுரேஷ் அந்த இடத்திலேயே ரத்த வௌ்ளத்தில் பிணமானார். இதை தடுக்க முயன்ற மனைவி ராகினிக்கும் வெட்டு விழுந்தது.
தகவலறிந்து வந்த போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த ராகினி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு தலைவெட்டி சந்துரு கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கொலைக்கு பழிக்குப்பழியாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சிலர் போலீசில் சரண் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தலைவெட்டி சந்த்ருவும், ஆட்டுக்குட்டி சுரேசும் ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் பூ வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலல் தலைவெட்டி சந்த்ரு கொலை செய்யப்பட்டார். இப்போது ஆட்டுக்குட்டி சுரேசும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஸ்ரீரங்கம் கீழவாசல் சக்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் (28), அதேப்பகுதியில் உள்ள சக்திநகரைச் சேர்ந்த ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரர் (36), ஸ்ரீரங்கம் சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த விமல் என்கிற விமல்ராஜ் (24), உள்ளிட்ட 5 பேரை வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதியில் சுற்றி வளைத்தனர் அப்போது ஜம்பு தப்பி ஓட முயன்ற போது ஸ்ரீரங்கம் போலீசார் காலில் சுட்ட்னர். சுருண்டு விழுந்த ரவுடி ஜம்புவை ஸ்ரீரங்கம் ஜிஎச்சில் போலீசார் சிகிச்சைக்கா சேர்த்தனர்..