2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கை… 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக அல்லல்பட்டு வருகிறோம். இன்றும் TET என்ற வடிவம் உயிர்ப்போடு இருப்பதற்கும், நாங்கள் உயிரோடு இருப்பதற்கும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினரே காரணம் என்பதை நாங்கள் உணர்ந்தவர்கள். 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 11 ஆண்டுகளாக அல்லல்பட்டு வருகிறோம். 60-க்கும் மேற்பட்ட போராட்டங்களை எடுத்தும் தீர்வு எட்டப்படவில்லை. ஏற்கனவே தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு இன்னொரு நியமனத்தேர்வு என்ற அரசாணை எண் 149 ஐ இரத்து செய்து தேர்தல் வாக்குறுதி 177-ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை 24-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற…TET தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்….
- by Authour
