திருக்கானூர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 தார் பிளான்ட் மற்றும் மாடர்ன் ரைஸ்மில்கள் இயங்கி வருகிறது. ரைஸ்மில்களில் இருந்து அதிக அளவு கழிவு நீர் மற்றும் சாம்பல் உட்பட பல்வேறு கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. சில மாடர்ன் ரைஸ் மில் மற்றும் தார் பிளாண்ட் அனைத்தும் 60 அடி கிராவல் அள்ளிய பள்ளங்களில் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் அனைத்தும் 60 அடி பள்ளத்தில் விடப்படுகிறது.
இதனால் நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் நிலை உள்ளது. மேலும் மாடர்ன் ரைஸ்மில்களில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல்களால் இப்போதில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூக்கள் மற்றும் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் இப்பகுதியில் புதிதாக தார் பிளாண்ட் மற்றும் மாடர்ன் ரைஸ் மில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே மேலும் தார் பிளாண்ட் மற்றும் மாடர்ன் ரைஸ் மில் அமைக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள தார் பிளாண்ட், ரைஸ் மில்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.