இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் 3 நாள் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமெரிக்க அதிபரின் இல்லத்தில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.
இந்திய தேசம் வாய்ப்புக்காக காத்திருக்கும் காலம் கடந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா இதனை செய்துள்ளது . உலகில் இந்தியா அழுத்தத்தை அதிகரிக்க விரும்பவில்லை. மாறாக அதன் தாக்கத்தை அதிகரிக்க விரும்புகிறது. நாம் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை. உலக வளர்ச்சிக்காக ஒத்துழைப்பை அதிகரிக்க விரும்புகிறோம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டணி வலுவடைந்து வருகிறது. PUSHP (பூ) உங்களுக்கு நினைவிருக்கும். இதனை நான் இப்படி சொல்ல விரும்புகிறேன். P – Progressive Bharat – முன்னேறும் பாரதம், U – Unstoppable Bharat – தடுக்க முடியாத பாரதம், S- Spiritual Bharat – ஆன்மிக பாரதம், H – Humanity First – மனிதநேய முதன்மை, P – Prosperus India – வளம் மிக்க பாரதம் என இந்த ஐந்தும் வளமான பாரதத்தை உருவாக்கும்.
இந்தியா பேசினால் உலகம் கவனிக்கும். தெற்கின் வலுவான குரலாக நாம் உள்ளோம். உலகில் பேரிடர் நிகழ்ந்தால் இந்தியா தான் முதலில் உதவுகிறது. கரோனா சமயத்தில் சுமார் 150 நாடுகளுக்கு நாம் தடுப்பூசி மற்றும் மருந்துகளை விநியோகித்தோம்.
அறிவு பகிர்வதற்கும், செல்வம் அக்கறைக்கும், அதிகாரம் பாதுகாப்பதற்கும் என இந்தியா கருதுகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.