திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (32) இவர் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு போத்தீஸீல் பணிபுரிந்து வேலையிலிருந்து வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் ஒரு மனைவியும் உள்ளனர்.நேற்று இரவு 11:30 மணியளவில் வீட்டில் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. இன்று காலை உய்யக் கொண்டான் கரையோரமாக முட்புதரில் இருசக்கர வாகனமும் சரவணகுமாரும் கருகி கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் சில மாதங்களாக வேலையில்லாத விரக்தியில் இருந்த சரவணகுமார் நேற்று மாலை மது குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் டூவீலரும் எரிந்து கிடந்தது குறிப்பிடதக்கது.