தமிழகத்தின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் கொடியேற்று விழாவை நடத்தியும், தங்களது வாகனங்களில் கொடியேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பஸ் நிலையம், அண்ணா நகர், ஷாநகர் கார்னர் உள்ளிட்ட மூன்று இடங்களில் அரவக்குறிச்சி
சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சதீஷ் ஏற்பாட்டில் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் கட்சி கொடியேற்றி
பொதுமக்களுக்கு இனிப்புகள் உற்சாகமாக கொண்டாடினர்.
அரவக்குறிச்சி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.