அரியலூர் மாவட்டம், தத்தனூர் பொட்ட கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (65). விவசாயியான இவர் தனது சைக்கிளில் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக சைக்கிளில் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிரே தத்தனூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், முதியவர் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் முதியவர் ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முதியவர் ராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய செந்தில்குமார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பைக் மோதி சைக்கிளில் சென்ற விவசாயி பலி… டீ குடித்துவிட்டு திரும்பும் போது பரிதாபம்…
- by Authour
