Skip to content
Home » திருச்சி பட்டதாரி பெண்ணை கொல்ல முயன்ற தோழி….கமிஷனிரிடம் புகார்

திருச்சி பட்டதாரி பெண்ணை கொல்ல முயன்ற தோழி….கமிஷனிரிடம் புகார்

  • by Senthil

திருச்சி வயலூர் ரோடு சண்முகா நகரை சேர்ந்த  மதுரை வீரன் என்பவரது மகள் யுவராணி(24).   பட்டதாரி. இவர் திருச்சி  திண்டுக்கல் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பியூட்டிசியன் கோர்ஸ் படித்து வருகிறார். இவர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் அமலோற்பவி வளாகத்தில் ஜெயராம் கல்வி நிறுவனத்தில் பியூட்டிசியன் கிளாஸ் படித்து வருகிறேன். பவதாரணி என்பவர் என்னுடன் பியூட்டிசியன் கிளாஸ் படித்து வருகிறார். ஒரு நாள் பவதாரணி தனது அம்மாவுடன் பேசுவதற்காக எனது போனை வாங்கினார். அப்போது எனது போனில் உள்ள Contact Number அனைத்தையும் எடுத்து, அனைவரிடமும் என்னை பற்றி தவறாக பேசி வந்துள்ளார். நான் ஏற்கனவே காதலித்த யோகேஷ்வரனிடமும் என்னை பற்றி தவறாக சொல்லி, அவரது அண்ணன் தியாகராஜனிடமும்
என்னை பற்றி தவறாக கூறி, எனக்கும், யோகேஷ்வரனுக்கும் நடக்க இருந்த திருமணத்தை இடையூறு செய்து நிறுத்தியது எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.

இதனால் எனக்கும் யோகேஷ்வரனுக்கும் பிரச்சினை ஏற்பட்டு, யோகேஷ்வரன் என்னை வேண்டாம் என்று கூறியதால், நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் காரணமாக அவர் மீதுள்ள புகார் நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. எனது நண்பர் கார்த்திக், தோழிகள் மற்றும் உறவினர்களிடம் “என்னை தவறான பெண் என்றும், பல ஆண்களை காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்றும், எனது அம்மாவும், நானும் 10 திருமணம் செய்திருக்கிறோம் என்றும் எங்களை அவதூறாக பேசி வருகிறார்.”

கடந்த 20.08.2024 அன்று பியூட்டிசியன் கிளாசில் இருக்கும்போது, என் Contact Number “ஐ எடுத்து அவர்களிடம் என்னை பற்றி ஏன் தவறாக சொல்லியிருக்கிறாய் என்று நான் பவதாரணியிடம் கேட்டபோது, “அப்படிதான் உன்னை அசிங்கப்படுத்துவேன் எனக்கூறி பிளேடால் என் கையில் கீறினார். கழுத்திலும் கீறி கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.  இதற்காக நான்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன்.
ஆஸ்பத்திரியில்  இருந்தபோது, கன்டோன்மெண்ட் காவல்நிலைய காவலர் வந்து விசாரணை செய்தார்.அதன் பிறகு

காவல்நிலையத்திற்கு வர சொன்னதன் பேரில் 23.08.2024 நான் சென்றேன். அப்போது பவதாரணி, அம்மா பவானி, அவருடைய மாமா இளையராஜா ஆகியோர் வந்தார்கள். போலீசார் எங்களை சமாதான முறையில் செல்லுங்கள் என்று கூறி எங்களை அனுப்பி வைத்தார்கள்.

விசாரணை முடிந்து வெளியில் வந்தபோது பவதாரணியின் மாமா இளையராஜா “எங்களை காவல்நிலையம் வரை கூட்டிவந்து விட்டுட்ட இல்ல உன்னை கொல்லாமல் விடமாட்டோம், உன்னை பெட்ரோல் ஊத்தி எரித்துவிடுகிறோம் பாரு, நீ எப்படி வேலைக்கு போவ, எப்படி வாழ போறேன்னு பார்க்குறேன்டி என்று எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.” நான் மருத்துவமனையிலிருந்து சிசிக்சை பெற்று வந்ததற்கு பிறகு காவல்நிலையத்தில் எந்த.ஒரு புகாரும் பதிவு செய்யவில்லை.

பவதாரணி என்னிடம் பிரச்சினை ஏன் செய்கிறார் என்று அவர் போனை பார்த்தபோது, நான் அறிமுகம் ஆகாததற்கு முன்னரே Instagram மூலமாக பவதாரணியும், எனது தம்பி யுவராஜ்-ம் காதலித்து வந்துள்ளார்கள். பவதாரணி,  சிலர் மூலமாக   என்னையும், என் அம்மாவையும் கொல்வதற்காக சதி திட்டம் தீட்டியுள்ளா. எங்கள் வீட்டில் நானும், எனது தம்பியும் தான் வாரிசாக உள்ளோம். என்னை கொலை செய்துவிட்டால் எங்களுக்கு சொந்தமான வீட்டையும், கடையையும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பவதாரணி செயல்பட்டு வருகிறார். இவை அனைத்தும் அவர் வைத்துள்ள செல்போன் மூலமான குறுஞ்செய்தியை ஆராய்ந்து அறிந்து கொண்டேன். பவதாரணியும்,யுவராஜ்-ம் என்னை கொல்வதற்கான முயற்சி செய்த சதிதிட்ட குறுஞ்செய்தி ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.

ஆகவே  எனது திருமணத்தை கலைத்துவிட்டு, என்னை நிம்மதி இழக்க செய்து, அமைதியான முறையில் வாழ்க்கை நடத்தி வரும் என் மீது அபாண்டமான குற்றங்களை சுமத்தி, எனக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகளை கூறி, என்னை கொலை செய்யும் நோக்குடன் செயல்படும் பவதாரணி, யுவராஜ், இளையராஜா, ஜானகி, பவானி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க  கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு  கமிஷனர்  காமினி உத்தரவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!