கோவை,பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள மத்தம்பாளையம் அல்லிநகர் அருகில் போர்வெல் லாரிகள் நிறுத்தப்பட்டு வருகிறது. ஒரு போர்வெல் லாரியில் ஓட்டுநராக வேலை செய்பவர் காரமடை அடுத்துள்ள சாலவேம்பு பகுதியை சேர்ந்த புஜங்கபன் என்பவரின் மகன் 46 வயதான நந்தகுமார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சாலவேம்பு பகுதியில் வசிக்கிறார். ஆனால் தற்போது 2வது மனைவியுடன் நந்தகுமார் மருதூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று போர்வெல் வேலை இல்லாததால் லாரி நிறுத்துமிடமான அல்லிநகருக்கு வந்துள்ளார். தொடர்ந்து அங்கியே மது அருந்தியுள்ளார். அதிகமாக போதை தலைக்கு ஏறியாதால் அவர் லாரியிலேயே மேலே ஏறி படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை அருகில் இருந்தவர்கள் வந்தபார்த்த போது நந்தகுமார் லாரியில் இருந்து கீழே விழுந்து தலை மற்றும் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரில் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேற்கொண்டு நந்தகுமாரே கீழே விழுந்து இறந்தாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.