நாகை அடுத்த நாகூரில் அரசினர் குழந்தைகள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் உள்ளனர். இந்த விடுதியில் மனநல ஆலோசகராக சத்யபிரகாஷ் என்பவர் செயல்பட்டார். இவர் அவ்வப்போது விடுதிக்கு வந்து குழந்தைகளுக்கு மனநலம் குறித்து ஆலோசனை வழங்குவார்.
அப்போது அந்த குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாராம். சில தினங்களுக்கு முன் ஒரு குழந்தை இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறினார். அதை அவர் விசாரித்தபோது 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுபோல நாங்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம் என கூறினர். எனவே விடுதி காப்பாளர் நாகை மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யபிரகாசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.