அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பயங்கரவத குர்பந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் நடந்ததாகவும், ஜோ பைடன் அரசு முறியடித்ததாகவும் பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதற்கு இந்திய அரசு மீது குர்பந்த் சிங் பன்னூன் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தை இந்திய அரசின் கவனத்திற்கு அமெரிக்கா கொண்டு வந்தது.உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார். இதனிடையே நியூயார்க் நீதிமன்றத்தில் குருபந்த் சிங் பன்னூன் தொடர்ந்த வழக்கில், தன்னை கொலை செய்ய சதித்திட்டம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக பதிலளிக்கும்படி, இந்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல், ‘ ரா’ ஏஜென்ட் விக்ரம் யாதவ், தொழிலதிபர் நகில் குப்தா ஆகியோர் 21 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீன் ஜெய்ஸ்வால் கூறுகையில்.. இந்த வழக்கு தேவையில்லாதது. வழக்கை தொடர்ந்த பன்னூனின் பழைய வரலாறு அனைவருக்கும் தெரிந்தது. சட்டவிரோத அமைப்பைச் சேர்ந்தவர். பயங்கரவாத அமைப்பின் தலைவனாக இருந்து கொண்டு இந்திய தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு மிரட்டல் விடுத்து பேசி வருகிறார். இவரை கடந்த 2020ம் ஆண்டில் பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்தது. இவ்வறு அவர் கூறினார்.