புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று (19.09.2024) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.