இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவி ஏற்றுளளார். கம்பீரும், கிரிக்கெட் வீரர் கோலியும் களத்தில் பலமுறை மோதிக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த நிலையில் கோலிக்கே பயிற்சியாளராக கம்பீர் வந்துள்ளார். இவா்கள் இருவரும் கலந்துகொண்ட ஒரு நேருக்குநேர் உரையாடல் நிகழ்ச்சியில், நீங்கள் ஏன் பயிற்சியாளர் ஆனீர்கள் என கோலி கேள்வி எழுப்பினார்.
அதற்கு கம்பீர் அளித்த பதில் : “எனக்கு எப்பொழுதுமே சவால் என்றால் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரராக இருக்கும்போது நான் பல சவால்களை கடந்து வந்துள்ளேன். தற்போது பயிற்சியாளராகவும் ‘அவதாரம் எடுத்து இருக்கிறேன். விளையாடும் காலத்தில் பயிற்சியாளராக வருவேன் என்று நினைத்து கூட பார்த்தது கிடையாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட நான் இதை பற்றி யோசிக்கவில்லை. ஆனால் தற்போது பயிற்சியாளராக சவாலையும் ஏற்றுக் கொண்டு என்னுடைய திறமையை வெளிப்படுத்த இந்த முடிவை நான் எடுத்துக் கொண்டேன்.இந்திய அணி அடுத்ததாக பல ஐசிசி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறினார்.