90 தொகுதிகளைக்கொண்ட அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.மத்திய மந்திரியும், பாஜக-வின் தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அம்மாநில முதல்வர் சைனி, மாநில தலைவர் மோகன் லால் படோனி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2100 வழங்குவோம் என காஙகிரசுக்கு போட்டியாக அறிவித்து உள்ளது. நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரியிலும் ஓபிசி, எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த ஹரியானா மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.