இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜிமுல் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்தார். ,இந்திய கேப்டன் ரோகித்-ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ரோகித் 6 ரன்னிலும், அதைத்தொடர்ந்து வந்த கில் ரன் எடுக்காமலும், கோலி 6 ரன்னிலும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
3 விக்கெட்டுகளையும் ஹசன் முகமூத் கைப்பற்றினார். ஜெய்ஸ்வாலுடன், பண்ட் ஜோடி சேர்ந்தார். இவரும் மதிய உணவு இடைவேளை வரை நிதானமாக ஆடி ஸ்கோரை சற்று உயர்த்தினர். 23 ஓவர்கள் ஆடிய நிலையில் ஸ்கோர் 88 ஆக இருந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சற்று நேரத்திலேயே பண்ட் அவுட் ஆனார். அவர் 52 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார். அவரது விக்கெட்டையும் ஹசன் முகமூத்தே கைப்பற்றினார். பண்ட்க்கு பதில் கே. எல். ராகுல் களம் இறங்கினார். தற்போது ஜெய்ஸ்வால் 43 ரன்களுடனும், ராகுல் 1 ரன்னுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இந்தியா 28 ஓவர்களில் 103 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.