Skip to content
Home » ஒரே நாடு ஒரே தேர்தல்…..முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல்…..முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த  தீவிரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:

‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறான ஒரு முன்மொழிவாகும். இது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்க்கு சாத்தியமற்றது. இதனை ஒருபோதும் பாஜகவால் செயல்படுத்த முடியாது. பாஜகவின் ஈகோவால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது. இது போன்ற திசை மாற்றும் விவகாரங்களில் தங்கள் சக்தியை மத்திய அரசு செலவிட வேண்டாம்.வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!