Skip to content

அரசின் இலவச முட்டைகள் ஒட்டலுக்கு சப்ளை எப்படி?.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீரத்னா ஓட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மிகக்குறைந்த விலையில் இந்த முட்டைகளை கொள்முதல் செய்து ஆம்லெட், ஆப்பாயில் என ஒட்டலுக்கு வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை பலரும் அதிர்ச்சியாக பார்த்து சென்றனர்.  இந்த ஓட்டலுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து இந்த முட்டைகள் வாங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அங்கிருந்து முட்டை மட்டுமல்லாது பாமாயில், அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக புொதுமக்கள் புகார் கூறுகின்றனர். ரத்னா ஒட்டலில் சமையல்அறை அனைவரும் பார்க்கும் வகையில் இருப்பதாகவும் பல ஒட்டல்களில் சமையல் அறை மறைவாக இருப்பதால் முட்டை விநியோகம் குறித்து தெரியாமலேயே இருக்க வாய்ப்பு உள்ளதாவும் இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!