சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி. இவர் மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காக்காதோப்பு பாலாஜியை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர் தப்பியோட முயற்சித்துள்ளார். இதையடுத்து, காக்காதோப்பு பாலாஜி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் காக்காதோப்பு பாலாஜி உயிரிழந்தார். உயிரிழந்த காக்காதோப்பு பாலாஜியின் உடல் பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டபின் நடைபெறும் 2வது என்கவுண்ட்டர் இதுவாகும்.