தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இந்திய அளவில் மதுரையில் அதிகபட்ச 105.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நேற்று மட்டும் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்த இடங்கள்.. மதுரை 105.8 டிகிரி (41 செல்சியஸ்), ஈரோடு 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்), நாகப்பட்டினம் 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), பாளையங்கோட்டை 102.2 டிகிரி (39 செல்சியஸ்), தஞ்சாவூர் 102.2 டிகிரி (39 செல்சியஸ்), அதிராமப்பட்டினம் 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்), திருச்சி 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்), கரூர் 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்), கடலூர் 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), சென்னை நுங்கம்பாக்கம் 100.4 டிகிரி (38 செல்சியஸ்), வேலூர் 100.4 டிகிரி (38 செல்சியஸ்). இதுதவிர புதுச்சேரியில் 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), காரைக்கால் 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது.