Skip to content
Home » சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி
ஏற்கப்பட்டது.  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம்,

சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வாசிக்க அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!