விசிக சார்பில் நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக விற்கு அழைப்பு விடுத்திருந்தார் திருமாவளவன். மேலும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அவரது கட்சி சார்பில் எக்ஸ் வலை தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
