Skip to content
Home » திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் வயது ( 40 ) இவர் பெல் (BHEL) நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கிருத்திகா வயது (13) இவர் பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். ஆஷிகா வயது (6) இவர் பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று மதியம் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு சுரேஷ் பத்தாளபேட்டை பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளிப்பதற்காக முயன்றுள்ளார்.  மூத்த மகள் கிருத்திகா தண்ணீரில் இறங்காமல் கரையில் இருந்துள்ளார். இளைய மகள் ஆஷிகா தண்ணீரில் குளிப்பதற்காக இறங்கிய பொழுது தண்ணீர் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக சுரேஷ் தண்ணீரில் இறங்கியுள்ளார். இதில் சுரேஷும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.  இதனை சற்றும் எதிர்பாராத கிருத்திகா தனது தங்கையும் தந்தையும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து ஆஷிகாவை மீட்டு உடனடியாக பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பறிசோதித்த மருத்துவர்கள் ஆஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் சுரேஷ் உடலை தேடும் பணி நடைபெறுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர்போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!