தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்து தேர்வு நடந்தது. திருச்சி மாவட்டத்தில் 115 தேர்வு மையங்களில் 33,106 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். திருச்சி பொன்மலைப்பட்டி இருதய மேல்நிலைப்பள்ளியில் மையத்தில் இளங்கோவன் மற்றும் அவரது மகள் மதுபாலா ஆகிய இரண்டு பேரும் தேர்வு எழுதினர். தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இளங்கோவன் கடந்த 20 ஆண்டுகளாக
போட்டி தேர்வுகளை எழுதி வருகிறார். விடாமுயற்சியாக தற்போது 20வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியுள்ளார். மகள் மதுபாலா சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவரும் தற்போது போட்டி தேர்வுகளை எழுதி வருகிறார். அந்த வகையில் தந்தை மகள் இரண்டு பேருக்கும் ஒரே மையத்தில் இரு வேறு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் இளங்கோவனின் விடா முயற்சியை அதிகாரிகள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.