Skip to content
Home » குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA ) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் தேர்வு நடைபெறும் அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி மற்றும் தாமரைக்குளம் வித்யா மந்தீர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA ) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள், 14.09.2024 இன்று சனிக்கிழமை முற்பகல் மட்டும் அரியலூர், உடையார்பாளையம் ஆகிய 2 வட்டங்களிலும் 29 தேர்வு கூடங்களில் 8761 தேர்வர்கள், தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அதன்படி இன்று தேர்வுக்கு வருகை புரிந்தவர்கள் 6734, தேர்வு எழுத வருகை புரியாதவர்கள் 2027 நபர்கள். மேலும், அரியலூர் மாவட்டத்தில் இத்தேர்வை கண்காணிப்பிற்காக துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை அலுவலர்கள், 08 இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர் / உதவியாளர்

நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட 29 ஆய்வு அலுவலர்கள், 29 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு தேர்வு கூடங்களுக்கும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!