திருச்சி மாநகரின் மத்திய பகுதியான தில்லைநகர் 10வது கிராஸ் சாலையில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் வீட்டின் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இரவு கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. திருச்சி தில்லைநகர் பகுதி எப்பொழுதும் பொதுமக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் தொடர்ந்து இருக்கும் பகுதியாகும். திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமரா செயல்படாததால் வங்கி ஏடிஎம்ல் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பத்தில் ஈடுபட்டவர் யாரென்று விசாரணை
செய்து வருகின்றரன். முதல் கட்ட விசாரணையில் கஞ்சா போதையில் வந்த 2 சிறுவர்களில் ஒருவன் உள்ளே சென்று ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் உடைக்க முடியாததால் அச்சிறுவன் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. திருச்சி மாநகரில் இரவு நேரங்களில் கஞ்சா போதையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வர கஞ்சா விற்பனையை முழுவதும் தடை செய்தால் மட்டுமே முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.