அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார். சென்னை விமானநிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது. …18 முன்னணி நிறுவனங்கள் உடன் ரூ. 7616 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க பயணத்தில்
போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. 11516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழக மக்களுக்கான வெற்றி பயணம் . திருச்சி, மதுரை , கோவை , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயனளிக்கும் எனவும் தெரிவித்தார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, ஆ.ராசா எம்பி உள்ளிட்டோர் வரவேற்றனர்.