மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு வட காளி பகுதி சேர்ந்த கலியமூர்த்தி (54) என்பவரது சொத்தை எழுதிக் கொடுக்கச் சொல்லி அவரது சித்தப்பா சுப்ரமணியன்(90) அவரது மகன் கருணாநிதி (45), அவரது மருமகன் சேட்டு (58)
ஆகியோர் கலியமூர்த்தியை கட்டிப் போட்டு கட்டையாலும் இரும்பு கம்பியாலும் தலை, உடல், உயிர்நிலை போன்ற பகுதிகளில் அடித்துப் போட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் கிடந்த கலியமூர்த்தியை அங்கிருந்து நபர் காரில் அழைத்துச் சென்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலையின்றி இரவு கலியமூர்த்தி இறந்து விட்டார். இது குறித்து கலியமூர்த்தியின் தாய் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்த மூன்று நபர்களையும் மணல்மேடு போலீசார் கைது செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டதற்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கலியமூர்த்தி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.