மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபர் சீனிவாசன் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. தங்களிடம் கேள்வி கேட்பவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ பாஜகவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில் ஓட்டல் அதிபர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டேன். தனிப்பட்ட உரையாடல் குறித்த வீடியோ வெளியிடப்பட்டது தனியுரிமை மீறல். இதற்காக அவரிடம் பேசி மன்னிப்பு கேட்டேன் என்று அதில் கூறி உள்ளார்.
வானதி சீனிவாசன் , ஓட்டல் அதிபரை மன்னிப்பு கேட்க அழைத்து வந்த நிலையில், இந்த வீடியோ வெளியானதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்டு உள்ளார். இதன் மூலம் அண்ணாமலை- வானதி இடையிலான கோஷ்டி பூசல் வெளியே வந்துள்ளது.