வேலூர் சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் கைதிகளை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி அவர்களை சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு ஆயுள் தண்டனை கைதியையும் அவர் கொடுமைப்படுத்தியதால் அவரது தாயார் போலீசில் புகார் செய்தார். இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ராஜலட்சுமி சித்ரவதை செய்தது உறுதியானது. அதன்பேரில் ராஜலட்சுமி
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சென்னை சிறைத்துறை டிஐஜி முருகேசன், வேலூர் சிறைத்துறை டிஐஜி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அரசு அறிவித்துள்ளது.