நெல்லை அடுத்த சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக “Genz Carnival-2K24” என்ற அறிவுத்திறன் சார்ந்த போட்டிகள் நடந்தது. பல்வேறு கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் முக்கூடல், பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் சார்பாக 20 மாணவிகள் கலந்து கொண்டு பரிசினை பெற்றனர்.
இதில் Adzap போட்டியில் முதலாவது பரிசினை இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவிகள் M.பவானி, R.வினிதா, R.வேலுந்தா, M.பிரபா K.கௌசீலா மற்றும் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி R.கிருத்திகா பெற்றனர்.
Paper presentation போட்டியில் முதலாவது பரிசினை இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி J.சாந்தினி மற்றும் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி A. ஐஸ்வர்யா பெற்றனர்.
Corporate Walk போட்டியில் இரண்டாவது பரிசினை முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவிகள் V. காவ்யா, C.முத்து ஐஸ்வர்யா, M.ஆதித்யா A.இசக்கியம்மாள் மற்றும் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவிகள் A.அனுபாலா மற்றும் A.அம்சா ஜெசி பெற்றனர்.
Master Mind போட்டியில் இரண்டாவது பரிசினை முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவிகள் S.சுபாலெட்சுமி மற்றும் R.வைஷ்ணவி பெற்றனர். Overall Championship-ல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள் இரண்டாவது இடத்தை பெற்றனர். போட்டியில் பங்கு பெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகச்சாமி , முதல்வர் முனைவர் R.கிருஷ்ணவேணி , கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள்பாராட்டினா்