புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், நீர்பழனி வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (11.09.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் , இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
இதனை தொடர்ந்து புதுகை விராலிமலை ஊராட்சி ஒன்றியம், நீர்பழனி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும்
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தர ம் குறித்து கலெக்டர் அருணா ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், நீர்பழனி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து, மாவட்ட
ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (11.09.2024) நேரில் சாப்பிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.