கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் டோனி. இவருக்கு சொந்தமான மாந்தோப்பு தமிழக கேரள எல்லை பகுதியான செமணாம்பதி கிராமத்தில் உள்ளது. இவரது தோட்டத்தை சபீஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இவர் தோட்டத்தில் எரிசாரயம் பதுக்கி வைத்திருப்பதாக கேரள மாநிலம் கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கேரளா தமிழக போலீஸ் உதவியுடன் கலால் துறை துணை கமிஷனர் ராகேஷ் தலைமையிலான குழு தோட்டத்தில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் பிடிக்ககூடிய 150 கேங்களில் 4500 லிட்டர் எரிசாரயம் இருந்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தோட்ட உரிமையாளர் மருத்துவர் டோனி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட எரிசாரயதை கேரள போலீசார் தமிழக எல்லை ஆனைமலை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய சபீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.