திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் கலைஞர் என்றொரு காவியம் நூல் வெளியீட்டு விழா பதிப்பகத்தின் உரிமையாளர் செந்தலை நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு கலைஞர் என்றொரு காவியம் நூலை வெளியிட திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. விஜயகுமார் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளரும்,மாநகர மேயருமான அன்பழகன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், முத்துச்செல்வம் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.