நடிகர் விஜய் தொடங்கி உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசாரும் அனுமதி வழங்கி உள்ளனர். மாநாட்டுக்காக அங்கு சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு இன்னும் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை.
இனி பணிகளை தொடங்கினாலும் 23ம் தேதிக்குள் செய்து முடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இந்த நிலையில் மாநாடு ரத்தாகிறது என சமூகவலை தளங்களில் செய்திகள் வெளிவந்தது. எனஅவ மாநாடு குறித்து இன்று விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார். அநேகமாக மாநாடு தேதி தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
s