பிரபல பின்னணி பாடகர் மனோ. இவரது மகன்கள் ரபீக், சாகீர், இவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து குடிபோதையில் சென்னையில் 16வயது சிறுவனையும், ஒரு கல்லூரி மாணவரையும் முட்டி போட வைத்து தாக்கி , ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அந்த சிறுவன் சார்பில் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோ மகன்களின் நண்பர்களான விக்னேஷ், தர்மா ஆகியோரை கைது செய்தனர். மனோவின்மகன்களை தேடி வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் இல்லை என்று கூறி விட்டனர். எனவே அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மனோ மகன்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மனோவின் மகன்கள் இதுபோல அடிக்கடி ரவுடித்தனம் செய்வது வாடிக்கை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.