Skip to content
Home » திருச்சி…. மின்சாரம் தாக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு நிவாரணம்….பழனியாண்டி எம்எல்ஏ. வழங்கினார்

திருச்சி…. மின்சாரம் தாக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு நிவாரணம்….பழனியாண்டி எம்எல்ஏ. வழங்கினார்

  • by Senthil

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல்  தெற்க தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி ராதிகா(44),  அதே கிராமத்தை சேர்ந்த  கொசவன் திடலை சேர்ந்த  செல்வராஜ் மனைவி செல்வி(48) ஆகியோர்  மின்சாரம் தாக்கி  உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் விவசாய தொழிலாளிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.  பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள்.

எனவே அரசின் சார்பில் இவர்களது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.

பழனியாண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை பரிசீலித்த அரசு  இறந்துபோன இருவரது குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டது.

அந்த நிவாரண உதவிக்கான ஆணைகளை பழனியாண்டி எம்.எல்.ஏ. இருவரது குடும்பத்துக்கும் வழங்கினார். அப்போது  மின்வாரிய தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!