தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடும் மாட்டுச் சந்தைக்கு ஆந்திரா கர்நாடகா கேரளா பகுதில் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் வருவதுண்டு இன்று செவ்வாய்கிழமை என்பதால் சந்தை களை கட்டி இருந்தது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாட்டு சந்தை வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து மத நல்லினத்தை போற்றும் வகையில் நல்லூர் பகுதியில் உள்ள
கிறிஸ்துவ திருச்சபை ஆயர் விழாவில் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார் மாநில மாட்டு வியாபாரிகள் சங்கம் செயலாளர் தென்றல் செல்வராஜ் ஏற்பாட்டில் அன்னதானத்தில் சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம். புளியோதரை, தக்காளி சாதம் என நான்கு வகை உணவுகள் சுமார் 2000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல், நகர மன்ற உறுப்பினர் பிஏ செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.