நடிகர் ஜெயம் ரவி, நேற்று விடுத்த அறிக்கையில் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார். இவர்களது திருமணம் 2009ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக ஜெயம் ரவி கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று ஜெயம் ரவி சார்பில் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2009ம் ஆண்டு நடந்த ஜெயம்ரவி -ஆர்த்தி திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என அதில் கோரி இருந்தார். வழக்கு விசாரணை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.