Skip to content
Home » பத்மஸ்ரீ விருது எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்….பாம்பு மாசி சடையன், வடிவேல் பேட்டி

பத்மஸ்ரீ விருது எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்….பாம்பு மாசி சடையன், வடிவேல் பேட்டி

இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் மாசி சடையன், வடிவேல் கோபால் இருவருக்கும் பத்மஸ்ரீ விருது,மகிழ்ச்சி அளிப்பதாக பாம்பு பிடி வீரர்கள் கரூரில் பேட்டி.

செங்கல்பட்டு மாவட்டம்  தென்னேரி என்ற கிராமத்தை  சேர்ந்த இருளர் சமூகத்தினர் மாசி சடையன்(45) மற்றும் வடிவேல் கோபால்(48) இருவருக்கும்  மத்திய அரச பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளது.

உயரிய விருதாக கருதப்படுவது பத்ம விருதுகள். நாட்டிற்காக மிகப்பெரிய சேவைகளை ஆற்றியவர்களுக்கு   வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கு பத்ம விருதுகள்  நேற்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் செங்கபல்பட்டு மாவட்டத்தை  சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான இவர்கள் மக்கள் வாழும் குடியிருப்பில் புகும் கொடிய விஷப்பாம்புகளை பிடிக்கும் சேவையாற்றி வருகின்றனர்.

உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வென்றுள்ள வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் இருவருக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்துள்ளனர்.

ஆபத்தான பாம்புகளை எவ்வாறு பிடிப்பது என்றும் பயிற்சி வழங்கி வருகின்றனர். நமது முன்னோர்கள் பாம்பு பிடிப்பதற்கு பயன்படுத்திய வித்தைகளையும், நடைமுறைகளையும் இவர்கள் இந்த நவீனகாலத்தில் மற்றவர்களுக்கு கற்றுத்தந்து வருகின்றனர்.

இயற்கையுடன் இணைந்து வாழும் பாரம்பரிய மக்களான இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பத்மஸ்ரீ விருதுகளை வென்றிருப்பது அந்த சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக , அங்கீகாரமாகபலரும் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் ப்ளோரிடாவின் மாகாணத்தில் பாம்புகள் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி கடந்த 2017ம் ஆண்டு பாம்புபிடிப்பதில் வல்லவர்களான மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரை அணுகியுள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவிற்கு சென்ற இவர்கள் இருவரும் 10 நாட்களில் 14 பாம்புகளை பிடித்து அசத்தினர். இவர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்த காரியங்களை செய்து வருகின்றனர்.

இவர்களது திறமையை பாராட்டிய புளோரிடாவின் வன உயிரிகள் அமைச்சக தலைவரான கிறிஸ்டன் ஸ்டிவெர்ட் இவர்கள் இருவரும் அபரிமிதமான திறமைகளை கொண்டவர்கள் என்றும் அப்போது பாராட்டினார்.

இந்த நிலையில் த்திய அரசு பத்மஸ்ரீ விருது இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது,செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் தற்போது கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மத்திய அரசு பத்ம ஶ்ரீ விருது அளித்துள்ளது குறித்து மாசி சடையனிடம் கூறியதபோது அவர் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார்.  இந்த விருது குறித்து அவர் கூறியதாவது:  சிறு வயது முதல் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் நாங்கள் இருளாச்சி சமுதாயj;ij சேர்ந்தவர்கள், இந்தியாவில் பல பகுதியில் பாம்பு பிடித்துக் கொண்டிருந்தபோது ராம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு  அவர் எங்களை விமானத்தில்  அமெரிக்கா அழைத்துச் சென்றது மறக்க முடியாது ராம் சாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

அமெரிக்காவில் சென்று பாம்பு பிடிக்க சொன்னார்கள் பைத்தம் என்ற வகை பாம்பை பிடிக்க சொன்னார்கள் இந்தப் பாம்பை பிடித்துபல விலங்குகளை காப்பாற்றி உள்ளோம்.

படிப்பறிவு இல்லாத நாங்கள் கணக்கு தெரியாத அளவு பாம்புகளை பிடித்து உள்ளோம்.பாம்பு பிடித்து தொழில் செய்து தான் தங்கள் குழந்தைகளை வளர்த்து வருகிறோம்.  எங்கள் பிள்ளைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கும் பாம்பு பிடிக்க சொல்லி கொடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விருது பெற உள்ள மற்றொரு பாம்பு பிடி வீரர் வடிவேல் கோபால்கூறுகையில்,

விவரம் தெரிந்த வயதில் இருந்து பாம்பு பிடிக்க சென்றோம்.அப்பா அம்மா உடன் சென்று நாங்கள் பாம்பு பிடித்து இருக்கிறோம்.தற்போது இப்பகுதியில் பாம்பு பிடித்துக் கொண்டிருக்கிறோம், விஷத்தன்மை உள்ள பாம்பான கட்டு விரியன்,கண்ணாடி விரியன்,சுருட்டை, நல்ல பாம்பு போன்ற விஷ பாம்புகளை மட்டுமே பிடித்து வருகிறோம்.

மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ வழங்கியது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா என்ற கேள்விக்கு.அந்த விருது பெயர் கூட சொல்ல முடியாத அவர்கள் கைகூப்பி கொண்டு நாங்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் ஆனால் இந்த விருது வழங்கியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இமு எங்கள் சமுதாயத்திற்கு எங்கள் மக்களுக்கும் மகிழ்ச்சியான நாள். எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த மரியாதை, அங்கீகாரம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *