திருச்சி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் KMS மினி ஹாலில் நடைபெற்றது.மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது MLA, மாநில பொருளாளர் பொறியாளர் .N. சபியுல்லா கான் மற்றும் தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.மாநில பொருளாளர் சபியுலலாகான் அனைத்து கிளைகளின் செயல்பாட்டை ஆய்வு செய்தார்.
மேலும் இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மாவட்ட துணைஅணிஇ கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த தகவலை மமக மாவட்ட துணைத்தலைவர் சையது முஸ்தபா தெரிவித்தார்.