திமுக முப்பெரும் விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கப்படும். இந்த அண்டு தி.மு.க. பவள விழா ஆண்டு என்பதால் சிறப்பாக இந்தாண்டு முதல் “மு.க.ஸ்டாலின்” பெயரில் விருது வழங்கப்படுகிறது. அந்த விருது தஞ்சை முன்னாள் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து-இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது. இந்த ஆண்டுக்கான “மு.க.ஸ்டாலின் விருது ” தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த விருது வரும் 17ம் தேதி மாலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வழங்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விருதினை வழங்குவார்.