அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் 200 -க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட சின்னவளையம், கீழக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு, கரடிகுளம், மலங்கன்குடியிருப்பு, மேலூர், இலையூர், வாரியங்காவல், பொன்பரப்பி, சிறுகளத்தூர், தேவனூர், ஆண்டிமடம் , மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி , விக்கிரமங்கலம் ,செந்துறை, தூத்தூர் விநாயகர்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட இருந்தன. இவற்றில் சென்ற ஆண்டு 139 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது அதேபோல் இந்த ஆண்டும் அதே 209 சிலைகளுக்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவற்றில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் ஜெயங்கொண்டத்தில் உள்ள
வேலாயுதநகருக்கு இன்று மாலை கொண்டு வரப்பட்டு அவைகளுக்கு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். மாவட்ட துணைத் தலைவர் பழனிச்சாமி, தலைமையில் ,மாநில செயற்குழு உறுப்பினர்கள் இராமபாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரிலிருலுந்து புறப்பட்டு பஸ்நிலையம் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று போலீசார் பாதுகாப்புடன் அணைக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதில் 60-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டது மீதமுள்ள சிலைகள் தனித்தனியாக கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊர்வலம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன், அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆகியோர் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயங்கொண்டம் ராஜா, மணிவண்ணன், நடராஜன் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்ட போலீசார்கள் மற்றும் அதிரடிப்படை போலீசார்கள் என ஜெயங்கொண்டம் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதே போல் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கொள்ளிடத்தில் கரைக்கப்பட்டது.
தா.பழூர் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.
இந்த விநாயகர் சிலையை தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபாடு செய்தனர். இன்று 3 ஆம் நாளை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. தா.பழூர் சுற்றி உள்ள அணைக்குடம், சிலால், அர்த்தனேரி, சுத்தமல்லி, காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மருத்துவத் துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.