அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் ஓட்டுப்பதிவு அக்டோபர் மாதம் 5ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்க அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இருக்கின்றன. ஆனால் தனித்து நிற்காமல் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. ஆனால் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று இரவுக்குள் கூட்டணியை உறுதி செய்யாவிட்டால் 90 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று ஹரியானா ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா மிரட்டல் விடுத்துள்ளார்.