இந்தியாவின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் விழாக்களில் தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.
கரூர்,மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74. வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர்துறை தோட்டக்கலைத் துறை என 55 பயனாளிகளுக்கு 28,21,261ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து அரசுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்
அரசுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் (ராஜன் தோட்டம்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைபார்வையிட்டார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி யுரேகா மாவட்ட ஆட்சித்தலவரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா ஆகியோரும் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 74 வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி திறந்த காவல் வாகனத்தில் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றம் அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர். உலகெங்கும் சமாதானம் பரவ வெண்புறாக்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பறக்கவிட்டனர்.
பின்னர் 32 காவலர்களுக்கு முதலமைச்சரின் சிறந்த காவலர்களுக்கான பதக்கங்களை வழங்கி கலெக்டர் கௌரவித்தார். இதன் பின்னர் ஆயுதப்படை காவலர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், சாரண சாரணியர் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித் தலைவர் ரமணசரஸ்வதி ஏற்றுக்கொண்டார். மேலும் பல்வேறு துறைகளை சார்ந்த 46 பயனாளிகளுக்கு 17லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சி தலைவர் ரமண சரஸ்வதி வழங்கினார்.
பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று குடியரசு தின விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து,போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில்
வெண் புறாக்களையும், தேசியக்கொடி நிறத்திலான பலுான்களையும் பறக்கவிட்டார்.
தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 26 ஆயிரத்து 228 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழங்கினார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாமளா தேவி,மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் சேமப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் கவிதா ராமு தேசியகொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.அதைத்தொடர்ந்து தியாகிகளை கவுரவித்த கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிறப்பானபணிக்காக புதுக்கோட்டை நகர காவல் துணை கண்காணிப்பாளர்ஜி.ராகவிக்கு மாவட்டஆட்சியர் கவிதாராமுநற்சான்றிதழ் வழங்கிவாழ்த்தினார்.
பள்ளி மாணவ மாணவியர் களின்கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
.விழாவில் எஸ்.பி.(பொ) ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை இணக்குனர் கவிதப்பிரியா, அப்துல்லா எம்.பி, முத்துராஜா எம்.எல்.ஏ. கோட்டாட்சியர் முருகேசன், மக்கள் தொடர்பு அதிகாரி சண்முகசுந்தரம், தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.