நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவாபட்டியில் இருந்து லட்சுமி நாயக்கம்பட்டி வழியாக சிந்தலசெரியில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு பக்தர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். விநாயகர் சிலை ஏற்றிச்செல்லப்பட்ட டிராக்டரில் ஏராளமான சிறுவர்கள் ஏறி வந்து கொண்டிருந்தனர்.
வழியில் எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த மூன்று சிறுவர்கள் மறவாபட்டி யை சேர்ந்த ஆறுமுகம் மகன் விஷால் (14) ,தமிழன் மகன் நிவாஷ் (15) , பிரபு மகன் கிஷோர் (14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேவாரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடடித்தினர்.