மயிலாடுதுறை நகர பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினந்தோறும் வந்து செல்லும் நிலையில் அவர்கள் தாகத்திற்காகவும், கையில் எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருப்பதால் தண்ணீர் பாட்டில் ஒன்று ரூ.20 கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்காக தண்ணீர் பாட்டில் ஒன்று ரூ.15 என்ற மலிவு விலைக்கு ரயில் நிர்வாகத்தை ஏற்பாடு செய்துள்ளது, அதுபோல் மயிலாடுதுறை பேருந்து பயணிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று
மயிலாடுதுறை மாவட்ட திமுக விவசாய அணியினர் ஆலோசனை செய்தனர். ரூ.10-க்கு தண்ணீர் பாட்டில் விற்பனை செய்வது என்று முடிவு எடுத்தனர். திமுக விவசாய அணியின் மாவட்ட தலைவர் நாகப்பன் தனது நிதிமூலம் இதற்கான ஏற்பாட்டின செய்தார்.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் தண்ணீர் பாட்டில் ரூ.10 என்ற விலைக்கு விற்பதற்கான கடையை அமைத்தார், அதன் முதல் விற்பனையை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் பூம்புகார் எம் எல் ஏ நிவேதாமுருகன் கடையை திறந்து முதல் விற்பனையை துவங்கி வைத்தார் .
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் இந்நிலையில் கலந்து கொண்டனர்.
தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்வதை பேருந்து பயணிகள் வரவேற்றனர்.