பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் ஏழாம் வருடம் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா,மத பேதமின்றி இஸ்லாமியர்கள் பங்கு பெற்று விநாயகர் சிலை கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம். பொள்ளாச்சி- செப்-7 தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் வியாபாரிகள் நடத்தும் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது, இதில் இப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் கோவிலில் விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர், பின் மாட்டுச் சந்தையில்
அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது மேலும் சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக இஸ்லாமியர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது, 11ம் தேதி இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் என 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது,ஏற்பாட்டை மாநில மாட்டு சந்தை மாநில வியாபாரிகள் செயலாளர் தென்றல் செல்வராஜ்,மாநில விவசாய அணி துணைத் தலைவர் தமிழ்மணி,வால்பாறை சட்டமன்ற பொறுப்பாளர் அமுத பாரதி,நகராட்சி துணைத் தலைவர் கௌதமன்,கவுன்சிலர் பிஏ செந்தில்குமார், மற்றும் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.