நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு பெடரேஷன் சார்பில் சர்வதேச இளைஞர் விளையாட்டுச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளம், பொக்காரா ஸ்டேடியத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி மூன்று தினங்கள் நடைபெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென கபடி, பேட்மிட்டன், கிரிக்கெட், யோகா, டேக்வாண்டோ, கராத்தே, பாக்சிங், குத்துச்சண்டை, சிலம்பம், சதுரங்கம், கால்பந்து, கைப்பந்து, துப்பாக்கி சுடுதல் மற்றும் வாள்வீச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தில் இருந்து சிலம்பம் மற்றும் டேக்வாண்டா போட்டியில் நான்கு வீரர்கள் பங்கேற்றனர். இதில்
திருச்சி சூர்யா பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் நவீன்ராஜ் ஆகிய இருவரும் சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கமும், ஹேம்ராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்று தமிழகத்திற்கும், திருச்சிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பதக்கங்கள் வென்று திருச்சி வந்த வீரர்களை கல்லூரி சேர்மன் டாக்டர்.சுஜாதா சுப்பிரமணியன், மற்றும் செயலாளர் இன்ஜினியர்.சூர்யா சுப்ரமணியன் வழிகாட்டுதலின்படி கல்லூரி அறங்காவலர் எஸ்.முருகானந்தம், கல்லூரி முதல்வர்கள் டாக்டர்.ஜோஸ்லின், டாக்டர்.செல்வக்குமார் மற்றும் ஆசிரியர்கள் சக மாணவர்கள் என அனைவரும் சால்வை அணிவித்தும், கைத்தட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் அடுத்ததாக துபாயில் நடைபெறும் ஆசிய போட்டிக்கு மூன்று மாணவர்களும் தேர்வாகியுள்ளனர் என்பதும், ஆசிய போட்டிகளிலும் பதக்கங்கள் வென்று நிச்சயம் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடித் தருவோம் என மாணவர்கள் உறுதிப்பட தெரிவித்தனர்