பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த மினி பேருந்தில் திடீரென குபு குபுவென அதிகமான புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும், நடத்துநரும் அச்சத்தில் விரைவாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டபின் அருகில் இருந்த பாலத்தின் மேலே மினி பேருந்தை ஒட்டிச்சென்று இன்ஜினை நிறுத்தியதால் மினி பேருந்து எரிந்து விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது:
தஞ்சை புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை சென்று வரும் சரவணா எனும் பெயரில் உள்ள மினி பேருந்து நேற்று மதியம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 30 க்கும் மேற்பட்ட பயணிகளை
ஏற்றிக்கொண்டு – பழைய பேருந்து நிலையம் சென்ற போது, மேரீஸ் கார்னர் பகுதியில் திடீரென சைலன்சரில் இருந்து குபு குபுவென புகை வந்து எதிரே சாலையே தெரியாத அளவிற்கு புகை வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளை மேரீஸ் கார்னர் பகுதியில் இறக்கிவிட்டு விட்டு எதிரே மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பாலத்தின் மேலே பேருந்தை ஓட்டிச்சென்று இன்ஜினை அணைத்த பின்பு நிம்மதியடைந்தனர். புகையோடு பேருந்தை இயக்கி இருந்தால் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதை ஒட்டுநரும், நடத்துநரும் சாமர்த்தியமாக தடுத்தனர்.