Skip to content

அந்த காலத்தில் நடந்த பாலியல் தொல்லை.. ஆதாரம் தர முடியாது… நடிகை பிரியாமணி.!

  • by Authour

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் தொல்லை அனுபவங்களையும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். பிரபல நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்துவேன் என்று நிவின் பாலி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் பிரியாமணியும் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார் .

இது பற்றி பேசிய பிரியாமணி, “மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்து அறிக்கை வெளியாகி இருப்பது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கிறது. சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்கிறார்கள்.

நடிகைகளே பணம் குடுத்து அதை பண்றாங்க.. கடைசியா என்னையும்.. பிரியாமணி கதறல்

மலையாளத்தில் கமிட்டி அமைத்தது போல தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகிலும் கமிட்டிகள் அமைத்தால் நல்லா இருக்கும். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும். திரைத்துறை மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இருந்தாலும், பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது. இந்த காலத்தில் தான் கேமரா போன்கள் வந்துள்ளன.

அப்போ நடந்த சம்பவங்களுக்கு எப்படி ஆதாரம் கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, இப்போது வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அப்படியே தொடர வேண்டும். எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏதும் ஏற்படவில்லை. பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னதும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!